கோப்புப்படம்  
கிரிக்கெட்

ஜோ ரூட்டால் தெண்டுல்கரின் இந்த சாதனையை முறியடிக்க முடியும்: ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் நம்பிக்கை

தெண்டுல்கரின் இந்த சாதனையை ஜோ ரூட்டால் முறியடிக்க முடியும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன்,

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஜோரூட் முதல் போட்டியில் சதம் அடித்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி கிடைத்தது. அதோடு ஜோரூட் 10 ஆயிரம் ரன்னை தொட்டார். இந்த ரன்னை எடுத்த 14-வது வீரர் ஆவார்.

இந்த நிலையில் டெஸ்டில் அதிக ரன் எடுத்த தெண்டுல்கரின் (15,921) சாதனையை ஜோரூட் முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஜோரூட் மிகவும் பிரமாதமாக ஆடி வருகிறார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஜோரூட் இன்னும் 5 ஆண்டுகள் விளையாடலாம். இதனால் அவரால் தெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க இயலும். உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவரால் 15,000 ரன்னுக்கு மேல் எடுக்க இயலும். இவ்வாறு டெய்லர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு