image courtesy; twitter/ @ACCMedia1  
கிரிக்கெட்

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 188 ரன்களில் ஆல் அவுட்!

இதில் நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு 194 ரன்களை யுஏஇ இலக்காக நிர்ணயித்துள்ளது.

தினத்தந்தி

துபாய்,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதையடுத்து இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.

இதில் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்துடன் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் வங்காளதேச பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினர்.

விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை முஷீர் கான் மற்றும் முருகன் அபிஷேக் இருவரும் அரைசதம் அடித்து ஓரளவு காப்பாற்றினர். இருவரும் ஆட்டமிழந்த பின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

42.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 188 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முருகன் அபிஷேக் 62 ரன்களும், முஷீர் கான் 50 ரன்களும் அடித்தனர். வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக மருப் மிருதா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்க உள்ளது.

இதில் நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு 194 ரன்களை யுஏஇ இலக்காக நிர்ணயித்துள்ளது. 

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்