கிரிக்கெட்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நைஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.

தினத்தந்தி

கிம்பெர்லி,

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் கிம்பெர்லியில் நேற்று நடந்த பி பிரிவு ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி, நைஜீரியாவை எதிர்கொண்டது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த நைஜீரியா அணி, ஆஸ்திரேலியாவின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 30.3 ஓவர்களில் 61 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. பின்னர் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் இங்கிலாந்து அணிக்கு 43.4 ஓவர்களில் 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 43.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களே எடுத்தது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

புளோம்பாண்டீனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, அறிமுக அணியான ஜப்பானை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம்-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை