டிரினிடாட்,
16 அணிகள் இடையிலான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பி பிரிவில் இந்தியா-உகாண்டா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற உகாண்டா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரரான ரகுவன்சி பொறுப்புடன் விளையாடி 144 ரன்களை குவித்தார். மிடில் ஆர்டரில் ராஜ் பாவா அதிரடியாக விளையாடி 14 பவுண்டரி, 8 சிக்சருடன் 162 ரன்களை விளாசினார். உகாண்டா அணியின் பந்துவீச்சாளர்களால் இந்திய அணியில் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்தது. இதையடுத்து 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உகாண்டா அணி விளையாடி வருகிறது.