கிரிக்கெட்

200 டி20 போட்டிகள்... உலகில் முதல் வீராங்கனை - வரலாறு படைக்க காத்திருக்கும் ஹர்மன்பிரீத் கவுர்

இது இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது சர்வதேச அரங்கிலும் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது.

மான்செஸ்டர்,

200 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் படைக்க உள்ளார்.

வெற்றிப்பாதை

மகளிருக்கான 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானையும், அடுத்த ஆட்டத்தில் நெதர்லாந்தையும் எளிதாக வீழ்த்தி வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறது.

மான்செஸ்டரில் மோதல்

குரூப்-1 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மான்செஸ்டரில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

ஹர்மன்பிரீத் கவுருக்கு வரலாற்று சாதனை

இன்றைய போட்டியில் களமிறங்குவதன் மூலம் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 200 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைக்க உள்ளாார். இது இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது சர்வதேச அரங்கிலும் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது.