Image Courtesy : AFP 
கிரிக்கெட்

மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதுக்கான பெயர்களை பரிந்துரைத்தது ஐசிசி..!!

ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுக்கு ஐசிசி பெயர்களை பரிந்துரைத்துள்ளது.

தினத்தந்தி

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அண்மைக் காலமாக அறிவித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர், வீராங்கனைகள் பெயரை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ் மற்றும் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சிமோன் ஹார்மர் ஓமன் பேட்டர் ஜதீந்தர் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் நடாலி ஸ்கிவர் மற்றும் உகாண்டா ஆல்-ரவுண்டர் ஜேனட் எம்பாபாசி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இவர்களில் ஒரு சிறந்த வீரர், வீராங்கனை ஐ.சி.சி. யின் அங்கீகாரம் பெற்ற வாக்கு கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் விரைவில் தேர்வு செய்து அறிவிக்கப்படுவார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு