Image Courtesy : @ICC 
கிரிக்கெட்

அதிக விக்கெட் வீழ்த்திய தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் கேசவ் மகாராஜ் புதிய சாதனை

2-வது இடத்தில் இருந்த பால் ஆடம்சை பின்னுக்கு தள்ளி மகாராஜ் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

தினத்தந்தி

டர்பன்,

வங்காளதேச கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை வங்களாதேசம் அணி ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 367 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக பவுமா 93 ரன்கள் எடுத்தார்.

வங்காள தேச அணி தரப்பில் கலீத் அகமது 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் அணி 298 ரன்கள் மட்டுமே எடுத்தது. 69 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா ஆடியது.

இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் எடுத்தது. இதனால் வங்காளதேச அணிக்கு 274 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாது இன்னிங்சை ஆடிய வங்காள தேச அணி கேசவ் மகாராஜ் சுழலில் சிக்கியது.

அந்த அணி 19 ஓவர் மட்டுமே விளையாடி 53 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 220 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக கேசவ் மகாராஜ் தேர்வு செய்யப்பட்டார். கேசவ் மகாராஜ் 10 ஓவர் பந்து வீசி 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவின் முன்னனி பந்து வீச்சாளர்களில் ஒருவரான பால் ஆடம்ஸ் சாதனையை மகாராஜ் முறியடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்களில் 134 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்தில் இருந்த பால் ஆடம்சை பின்னுக்கு தள்ளி 136 விக்கெட்டுகளுடன் கேசவ் மகாராஜ் 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஹக் டெய்ஃபீல்ட் 170 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்..

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு