கோப்புப்படம் 
கிரிக்கெட்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல்....?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த சூழலில் டெஸ்ட் தொடரில் இருந்து துணை கேப்டன் ரோகித் சாமா காயம் காரணமாக விலகினா. அவருக்குப் பதிலாக இந்திய ஏ அணியின் கேப்டன் பிரியங்க் பாஞ்சல் பிரதான அணியில் இணைந்தார். ரோகித்துக்கு பதிலாக துணை கேப்டனாக எவரையும் பிசிசிஐ அறிவிக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மா இல்லாத நிலையில் டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுலுடன் இணைந்து மயங்க் அகாவால் இன்னிங்சை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்