கிரிக்கெட்

முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்

மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை, 

நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான நடராஜன் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். அறுவை சிகிச்சை தான் அவரது காயத்திற்கு தீர்வு என மருத்துவர்கள் சொல்லிய காரணத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

இந்த சூழலில் நடராஜனுக்கு மூட்டு பகுதியில் இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை நடராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இன்று எனக்கு மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கவனத்துடன் மிக கனிவாக பழகி எனக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி. பிசிசிஐ-க்கு எனது நன்றிகள். நான் பூரண குணம் பெற வேண்டி எண்ணை வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் நன்றி என்று நடராஜன் பதிவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக பிசிசிஐ தனது டுவிட்டரில், விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். கூடிய விரைவில் பழையபடி உங்களை களத்தில் காண காத்திருக்கிறோம் என்று பதிவிட்டிருந்தது. 

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்