இந்த தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் வியப்பூட்டும் வகையில் இருந்தது. தொடக்க வீரராக களம் இறங்கி பதற்றத்தையும், தயக்கத்தையும் தாண்டி களத்தில் ஜொலித்த விதம், தொடக்க வீரராக களம் கண்ட முதல் தொடரிலேயே தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்ட அவருக்கே ஒட்டுமொத்த பெருமையும் சேரும். இவ்வாறு கோலி கூறினார்.
டோனி குறித்து கங்குலி என்னிடம் இதுவரை பேசவில்லை - கோலி
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம், டோனி தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது டோனி இங்கு தான் இருக்கிறார். வீரர்கள் அறைக்கு சென்றால் நீங்கள் அவரிடம் ஹலோ சொல்லலாம் என்று சிரித்தபடி கூறினார். மேலும் அவர் கூறுகையில், கங்குலிக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். அவர் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக வந்து இருப்பது சிறப்புக்குரியது. ஆனால் டோனியின் எதிர்காலம் குறித்து அவர் என்னிடம் இதுவரை எதுவும் பேசவில்லை. இது தொடர்பாக அவருக்கு தேவை ஏற்படும் போது என்னிடம் பேசுவார். இது குறித்து பேச அழைக்கும் போது கங்குலியை சந்திப்பேன் என்றார்.