ஷார்ஜா,
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து தற்போது பிளே-ஆப் சுற்று நடந்து வருகிறது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து நடந்த வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை விரட்டியடித்தது.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் இன்றிரவு சார்ஜாவில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி டெல்லி முதலில் பேட்டிங் செய்கிறது.