கிரிக்கெட்

ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி குல்தீப் யாதவ் அபாரம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

தினத்தந்தி

விசாகப்பட்டினம்,

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 387 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகிறது. இதனால், இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணி பேட் செய்யும் போது 32 ஓவரை வீசிய குல்தீப் யாதவ், அந்த ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவ் கைப்பற்றும் 2-வது ஹாட்ரிக் இதுவாகும். ஒருநாள் போட்டிகளில், மலிங்கா அதிகபட்சமாக 3 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்