கிரிக்கெட்

ரோகித் சர்மாவுக்கு லட்சுமண் புகழாரம்

ரோகித் சர்மாவுக்கு, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமண் புகழாரம் சூட்டியுள்ளார்.

மும்பை,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ரோகித் சர்மா முதலாவது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தே முன்னேற்றம் கண்டு வருகிறார். ஒவ்வொரு ஆட்டத்திலும் சாதிக்கும் போது அவரது நம்பிக்கையும் அதிகரிக்கிறது. ஒரு கேப்டனாக நெருக்கடியான சூழலில் பதற்றம் இன்றி திறம்பட சமாளிக்கிறார். இதே போல் பேட்ஸ்மேனாகவும் சிக்கலான கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதனால் தான் அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக (இவரது தலைமையில் மும்பை அணி 4 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது) திகழ்கிறார் என்றார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை