கிரிக்கெட்

கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி “ஹாட்ரிக் வெற்றி”

கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றிபெற்று அசத்தியது. #INDvsWI

தினத்தந்தி

சென்னை,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இந்திய பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் முறையே 5 விக்கெட் மற்றும் 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரையும் இழந்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் அதிகபட்சமாக போரன் 53(25) ரன்களும், டேரன் பிராவோ 43(37) ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்தது .

பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் ஷிகார் தவான், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ரோகித் சர்மா 4(6) ரன்களில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய லோகேஷ் ராகுல் 17(10) ரன்களில் வெளியேறினார்.

அடுத்ததாக ஷிகார் தவானுடன் ரிஷாப் பாண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. இதில் தனது அதிரடி ஆட்டத்தினால் தவான் தனது அரை சதத்தினை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து ரிஷாப் பாண்டும் தனது அரை சதத்தினை பதிவு செய்து அசத்தினார்.

இந்த ஜோடி பந்துகளை நாலாபுறமும் சிதறவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இறுதியில் வெற்றிபெற 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரிஷாப் பாண்ட் 58(38) ரன்னில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து வெற்றிக்கு 1 ரன்கள் தேவைப்பட்டு ஆட்டம் சமன் ஆன நிலையில் ஷிகார் தவான் 92(62) ரன்களில் வெளியேறினார். இதனால் ஆட்டத்தின் இறுதியில் பதற்றம் தொற்றிக்கொண்டது.

முடிவில் மணீஷ் பாண்டே 4(6) ரன்களும் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக கீமோ பால் 2 விக்கெட்டுகளும், தாமஸ் மற்றும் ஆலன் தலா1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றதுடன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை