Image Courtesy: @EmiratesCricket  
கிரிக்கெட்

கடைசி டி20 போட்டி; நவீன் அபார பந்துவீச்சு...ஆப்கானிஸ்தானுக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்த யுஏஇ..!

ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தினத்தந்தி

ஷார்ஜா,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் யுஏஇ அணி 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே அடித்தது. யுஏஇ அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் முஹம்மது வசீம் 27 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் நவீன்-உல்-ஹக் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 127 ரன்கள் அடித்தால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் ஆடி வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு