கிரிக்கெட்

ஐபிஎல்: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ரித்திமான் சஹா சிறப்பான தொடக்கம் தர தவறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பவர்பிளே முடிவில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 32 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஐதராபாத் அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஐதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் 9 வது ஓவரில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெல்லி அணியின் நட்சத்திர வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் பாதியிலேயே வெளியேறினார்.

முதல் 10 ஓவர்களில் ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது.

ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக அப்துல் சமாத் 28 ரன்களும், ரஷித் கான் 22 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியில் சிறப்பாக பந்துவீசிய ககிசோ ரபடா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி தரப்பில் ரபடா 3 விக்கெட்டுகளையும், நோர்ஜோ 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து