அபுதாபி,
20- ஓவர் உலக கோப்பை தொடரின் சூப்பர் குரூப்-12- பிரிவில் இன்று நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சீரான இடைவெளியிலும் விக்கெட்டுகள் விழுந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன்வேகம் சற்று மட்டுப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157- ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்தது. இதன் மூலம் 158- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியை பொருத்தவரை அதிகபட்சமாக பொல்லார்டு 44 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சை பொருத்தவரை ஆஸ்திரேலிய அணியின் ஹேசல்வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.