கிரிக்கெட்

கிரிக்கெட்டில் மழை பாதிப்பு விதிமுறையை கண்டுபிடித்த லீவிஸ் மரணம்

டக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லீவிஸ் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

தினத்தந்தி

லண்டன்,

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மழை காரணமாக பாதிக்கப்படும்பட்சத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு புதிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும். சிக்கலான இந்த வெற்றி இலக்கு கணக்கீட்டு முறையை கணிதவியல் நிபுணர்கள் பிராங்க் டக்வொர்த், டோனி லீவிஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கினார்கள். 1997-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டக்வொர்த் லீவிஸ் விதிமுறையை 1999-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

தற்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது. 2014-ம் ஆண்டில் கணிதவியலாளர் ஸ்டீவன் ஸ்டெர்ன் என்பவரால் நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ப இந்த விதிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. டக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லீவிஸ் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78 ஆகும். அவரது மறைவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை