கிரிக்கெட்

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி

காஷ்மீரில் உள்ள ராணுவ பள்ளிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டோனி திடீர் வருகை தந்து மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான டோனி நேற்று மாலை காஷ்மீரில் உள்ள ராணுவ பள்ளிக்கு திடீரென சென்றார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், தற்போது ஓய்வில் உள்ள டோனி, பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். டோனியின் எதிர்பாராத வருகையால் மாணவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். மாணவர்களிடம் கல்வி, விளையாட்டு ஆகிய இரண்டின் முக்கியத்துவம் பற்றி டோனி உரையாடியாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய டோனியை பெருமைப்படுத்தும் வகையில், கவுரவ ராணுவ லெப்டினெண்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டோனி, ராணுவ பள்ளிக்கு செல்லும் தகவல் யாருக்கும் தெரிவிக்கப்படாமல் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்