திருச்சி
திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக சில ரெயில்கள் பகுதியாகவும், சில ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
நாளை (ஞாயிற்றுக்கி ழமை) திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்:16843) ஈரோடு வரை மட்டுமே செல்லும். பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு முன்பதிவு இல்லா சிறப்பு ரெயிலாக பாலக்காடு வரை இயக்கப்படும். மேலும் காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் (எண்:56832) காரைக்குடியில் இருந்து 9-ந்தேதி வரை (7-ந்தேதி தவிர) காலை 9.50 மணிக்கு பதிலாக 25 நிமிடம் தாமத மாக காலை 10.15 மணிக்கு புறப்படும். அதுபோல் திருச்சி-வழியாக செல் லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 10 முதல் 160 நிமிடம் வரை தகுந்த இடங்களில் நின்று காலதாமதமாக செல்லும். குறிப்பாக சென்னை-குருவாயூர் வருகிற 10-ந்தேதி வரை 15 முதல் 45 நிமிடம் வரை தாமதம் ஏற்படும்.
இதேபோல் புருலியாவில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் புருலியா நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22605) வருகிற 8-ந்தேதி வழக்கமான அட்டவணைப்படியே இயங்கும். இந்த ரெயில் மாற்றுப்பாதையில் செல்லும் என அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு புறப்படும் நெல்லை புருலியா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22606) வருகிற 6 மற்றும் 10-ந்தேதிகளில் வழக்கமான அட்டவணைப்படியே இயங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.