Image Courtesy: @WSHFreedom 
கிரிக்கெட்

மேஜர் லீக் கிரிக்கெட்: எம்.ஐ.நியூயார்க் அணியை வீழ்த்தி வாஷிங்டன் ப்ரீடம் அபார வெற்றி

வாஷிங்டன் ப்ரீடம் தரப்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரிஸ் கவுஸ் 59 ரன்னும், டிராவிஸ் ஹெட் 54 ரன்னும் எடுத்தனர்.

டல்லாஸ்,

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எம்.ஐ.நியூயார்க் - வாஷிங்டன் ப்ரீடம் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வாஷிங்டன் ப்ரீடம் அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் குவித்தது. வாஷிங்டன் ப்ரீடம் தரப்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரிஸ் கவுஸ் 59 ரன்னும், டிராவிஸ் ஹெட் 54 ரன்னும் எடுத்தனர். நியூயார்க் அணி தரப்பில் ரஷித் கான், பொல்லார்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூயார்க் அணியினர் வாஷிங்டன் ப்ரீடம் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

வெறும் 13.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நியூயார்க் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 94 ரன் வித்தியாசத்தில் வாஷிங்டன் ப்ரீடம் அணி அபார வெற்றி பெற்றது.

நியூயார்க் தரப்பில் அதிகபட்சமாக ரொமாரியோ ஷெப்பர்ட் 25 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் அணி தரப்பில் ஜஸ்தீப் சிங் 3 விக்கெட், மார்கோ ஜான்சென், லாக்கி பெர்குசன், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் வாஷிங்டன் ப்ரீடம் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்