கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்டில் மாலத்தீவு 8 ரன்னில் சுருண்டது - 9 வீராங்கனைகள் டக்-அவுட்

20 ஓவர் கிரிக்கெட்டில் மாலத்தீவு அணி 8 ரன்னில் சுருண்டது. அதில் 9 வீராங்கனைகள் டக்-அவுட் ஆகினர்.

தினத்தந்தி

காத்மண்டு,

தெற்காசிய விளையாட்டில், பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்று நடந்த நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் மாலத்தீவு 11.3 ஓவர்களில் வெறும் 8 ரன்னில் சுருண்டது. 9 வீராங்கனைகள் டக்-அவுட் ஆனார்கள். தொடக்க வீராங்கனை அய்மா அஷ்சாத் 1 ரன் எடுத்தார். மற்ற 7 ரன்களும் எக்ஸ்டிரா வகையில் (வைடு) கிடைத்தது. இந்த ஆட்டம் ஐ.சி.சி. அங்கீகாரம் பெற்றது. பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு அணியின் 2-வது குறைந்த ஸ்கோர் இதுவாகும். மாலி அணி 6 ரன்னில் முடங்கியதே மோசமான ஸ்கோராக நீடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இலக்கை நேபாளம் அணி 7 பந்துகளில் எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்