கிரிக்கெட்

ஐபிஎல்: மும்பை அணியின் பயிற்சியாளராக மலிங்கா நியமனம் ?

அடுத்த ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்கா செயல்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

ஐபிஎல் போட்டியில் தற்போது மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து வீரர் ஷேன் பாண்ட் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை அணியின்  பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்கா செயல்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மலிங்கா மும்பை அணிகாக்க  139 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 195 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.  2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு அங்கமாக மலிங்கா இருந்துள்ளார்.2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்ல மலிங்காவின் முக்கிய காரணமாக இருந்தார்.

மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்கா நியமிக்கப்படுவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லைமலிங்கா 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்