கிரிக்கெட்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

டாப்8 அணிகள் மட்டுமே பங்கேற்கும் மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1ந்தேதி முதல் 18ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன.

ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த போட்டியில் இந்திய அணி பங்கேற்பது உறுதியாகி விட்ட நிலையில், அணித்தேர்வு இன்று நடைபெற்றது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை அறிவித்தனர்.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 பேர் கொண்ட வீரர்கள் விவரம் வருமாறு:- விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, ரகானே, எம்.எஸ் தோனி, யுவராஜ்சிங், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின், ஜடேஜா, ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார், மனிஷ் பாண்டே, ஜஸ்ப்ரித் பும்ரா

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு