கிரிக்கெட்

குஜராத் அணிக்கு எதிரான போட்டி மழையால் ரத்து: ஐதராபாத் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி

கொல்கத்தா , ராஜஸ்தான் அணிகளை தொடர்ந்து ஐதராபாத் மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

தினத்தந்தி

ஐதராபாத்,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற இருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் மொத்தமாக 15 புள்ளிகளை பெற்ற ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கொல்கத்தா , ராஜஸ்தான் அணிகளை தொடர்ந்து ஐதராபாத் மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

14 போட்டிகளில் 12 புள்ளிகளை பெற்ற குஜராத் அணி தொடரில் இருந்து வெளியேறியது. 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு