கிரிக்கெட்

ஐபிஎல்லில் மேட்ச் பிக்சிங் செய்ய முயற்சி? பிசிசிஐ தீவிர கண்காணிப்பு

கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

துபாய்,

கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பெருந்தொற்று அச்சுறுத்தலால் பயோ பாதுகாப்பு வளையத்தில் வீரர்கள் உள்ளனர். இதனால் வெளிநபர்கள் யாரும் நேரடியாக வீரர்களை அணுகுவதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைத்துள்ளது.

இந்த சூழலில், ஐபிஎல்லில் மேட்ச் பிக்சிங் செய்வதற்காக சூதாட்ட தரகர்கள், வீரர் ஒருவரை ஆன்லைன் மூலமாக அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் அஜித் சிங் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.." மேட்ச் பிக்ஸிங் செய்ய உதவுமாறு தன்னை ஒருவர் அணுகியதாக ஒரு வீரர் எங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஊழலில் ஆர்வமுள்ள நபரை நாங்கள் கண்காணித்து வருகிறோம், அவர் பிடிபட சிறிது காலம் ஆகும்" என்று கூறினார். ஊழல் எதிர்ப்பு நெறிமுறைகளின்படி, ரகசிய நோக்கங்களுக்காக அந்த வீரரின் பெயர் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்