கிரிக்கெட்

எம்.சி.சி. தலைவராக சங்கக்கரா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

எம்.சி.சி. தலைவராக சங்கக்கரா மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

லண்டன்,

கிரிக்கெட் விதிகளை உருவாக்குவதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) முன்னோடியாக இருக்கும் லண்டனில் செயல்படும் மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின் (எம்.சி.சி.) தலைவராக இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா இருக்கிறார்.இந்த பதவி காலம் ஓராண்டாகும். இந்த நிலையில் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் இந்த கிளப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு சங்கக்கராவின் பதவி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி அவர் அடுத்த ஆண்டு (2021) செப்டம்பர் வரை இந்த பணியில் தொடருவார். அடுத்த மாதம் 24-ந்தேதி நடக்கும் இந்த கிளப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள். எம்.சி.சி. தலைவராக ஒருவர் ஓராண்டுக்கு மேல் நீடிப்பது இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து