அபுதாபி,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. முதலில் பேட்டிங் செய்து 171- ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றை நினைத்து பார்க்க முடியும் என்ற நிலையில், இந்தப் போட்டியை மும்பை இந்தியன்ஸ் எதிர்கொள்கிறது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே இந்த ரன்ரேட் கணக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் செல்ல முடியும்.
ஐதராபாத் சன்ரைசர்சை (3 வெற்றி, 10 தோல்வியுடன் 6 புள்ளி) பொறுத்தவரை இந்த ஆட்டத்தின் முடிவு அவர்களுக்கு எந்தவித மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. ஏனெனில் இந்த சீசனில் அந்த அணிக்கு 8-வது இடம் தான் என்பது உறுதியாகி விட்டது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் படி ஐதராபாத் அணி முதலில் பந்து வீசுகிறது. ஐதரபாத் அணியில் காயம் காரணமாக கேப்டன் வில்லியம்சன் இடம் பெறவில்லை. இதனால், மனிஷ் பாண்டே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.