கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து மிஸ்பா உல் ஹக் விலகல்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர்,மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆகிய இரு பொறுப்புகளிலும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டார்.

தினத்தந்தி

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து மிஸ்பா உல் ஹக் விலகியுள்ளார். லாகூரில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மிஸ்பா உல் ஹக் இந்தத் தகவலை தெரிவித்தார்.

ஜிம்பாவேக்கு எதிரான தொடருக்கு அணியை தேர்வு செய்த பின்னர், தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற உள்ளதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர்,மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆகிய இரு பொறுப்புகளிலும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டார்.

தனிப்பட்ட முடிவு காரணமாகவே தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் தனக்கு யாரிடம் இருந்தும் இவ்விகாரத்தில் அழுத்தம் வரவில்லை எனவும் மிஸ்பா உல் ஹக் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு