கிரிக்கெட்

முதல் போட்டி மிஸ்... இன்று களமிறங்கும் ‘பிரேவிஸ்’? - வெளியான மாஸ் அப்டேட்

இன்று சென்னையில் நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே களமிறங்க உள்ளது.

சென்னை,

பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகிய டெவால்ட் பிரேவிஸ், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

பக்கவாட்டு தசை இழுப்பு (side strain) காரணமாக சென்னை அணியின் தொடக்கப்போட்டியில் அவர் விளையாடவில்லை. அந்தப் போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.

இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே களமிறங்க உள்ளது. இந்த முக்கியமான போட்டியில் பிரேவிஸ் அணியில் சேர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Also read:ஐபிஎல்: சென்னை - பஞ்சாப் இன்று மோதல்

கடந்த 2025 சீசனில், வெறும் 6 இன்னிங்ஸ்களில் 225 ரன்களை 180 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து, பிரேவிஸ் அணியின் முக்கிய அதிரடி வீரராக திகழ்ந்தார். அவரும் தோனியும் இல்லாததால், அணியின் மிடில் ஆர்டரில் பெரிய இடைவெளி ஏற்பட்டது.

தற்போது பிரேவிஸ் மீண்டும் அணியில் சேரும் பட்சத்தில், அது சென்னை அணிக்கு பெரிய பலமாக அமையும். முதல் போட்டியில் பேட்டிங் பலவீனமாக இருந்த நிலையில், அவரது வருகை மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.