Image Courtesy: @TheRealPCB  
கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மொஹ்சின் நக்வி தேர்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மொஹ்சின் நக்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக பஞ்சாப் மாகாணத்தின் தற்காலிக முதல் - மந்திரி மொஹ்சின் நக்வி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சையது மொஹ்சின் ரசா நக்வி 3 வருட காலத்திற்கு இந்த பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2022 முதல் வாரிய விவகாரங்களை நடத்தி வந்த இடைக்கால நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் கடந்த 4-ம் தேதி முடிவடைந்ததை அடுத்து தற்போது கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சையது மொஹ்சின் ரசா நக்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் மிகவும் பெருமையும், பணிவும் அடைகிறேன். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் நன்றி கூறுகிறேன்.

நாட்டில் விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதற்கும், பாகிஸ்தானில் கிரிக்கெட் நிர்வாகத்தில் நிபுணத்துவத்தை கொண்டு வருவதற்கும் நான் முழுமையாக கடமைப்பட்டுள்ளேன் என மொஹ்சின் நக்வி தனது தேர்தலுக்குப் பிறகு கூறினார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை