கிரிக்கெட்

இங்கிலாந்தில் அதிக சதங்கள்... உலக சாதனை படைத்த ரோகித் சர்மா

இது இங்கிலாந்து மண்ணில் அவரது 8-வது சதமாகும்.

லண்டன்,

ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

387 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 387 ரன்களை குவித்தது.

ரோகித் சதம்

388 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில், சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார். இது இங்கிலாந்து மண்ணில் அவரது 8-வது சதமாகும். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இப்போட்டியில் இந்தியா 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT