கிரிக்கெட்

”தல” என்றே அழைக்கிறார்கள் : சி.எஸ்.கே ரசிகர்கள் குறித்து டோனி உருக்கம்

”தல” என்றே அழைக்கிறார்கள் என்று சி.எஸ்.கே. ரசிகர்கள் குறித்து டோனி உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

சென்னை,

ஐபிஎல் தொடரின் 50-வது போட்டி நேற்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வி கண்டது. அதிரடியாக விளையாடிய டோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்தபின்னும் ரசிகர்கள் கலையாமல் தல தல என்று ஆரவாரம் செய்து கொண்டே இருந்தனர்.

வர்ணணையாளர் தோனியிடம் ஏன் உங்களை எல்லாரும் தல என்று அழைக்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர், எனக்கும் இது புதிதாகதான் இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டைட்டில் பாடலில் கூட தல தோனிக்கு என்று வரும். அப்போது எனக்கு என்னவென்று புரியவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் என்னை தோனி என்று அழைப்பதில்லை, தல என்றுதான் அழைக்கிறார்கள். நானும் அவர்களின் அன்பைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டேன். எனக்கு மட்டுமல்ல மற்ற வீரர்களுக்கும் சென்னை ரசிகர்கள் மிகுந்த ஊக்கம் அளிக்கின்றனர். அதுதான் எங்களின் பலம், நாங்கள் அவர்களுக்கு மிகவும் கடமைபட்டிருக்கிறோம் என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்