கிரிக்கெட்

தேசிய விளையாட்டு தினம்: கேதர் ஜாதவுடன் கோல்ப் விளையாடிய டோனி

இந்திய அணி வீரர் டோனி, கேதர் ஜாதவுடன் கோல்ப் விளையாடும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் டோனி, உலக கோப்பை தொடருக்கு பின் அவரின் ஓய்வு தொடர்பாக  பல்வேறு விதமான கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்தன. ஆனால்  தற்போது வரை ஓய்வு குறித்து எந்த வித அதிகாரப்பூர்வமான தகவலையும் டோனி தெரிவிக்கவில்லை. மேலும் சில நாட்களுக்கு  முன் டோனி ராணுவத்தில் இணைந்து பணியாற்றினார்.

இந்நிலையில் டோனி தற்போது இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான கேதர் ஜாதவ் உடன் அமெரிக்காவில் உள்ள ஒரு கிளப்பில் கோல்ப் விளையாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை கேதார் ஜாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். 

மேலும் அதில், அனைவருக்கு தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்கள் என்று கேதர் ஜாதவ் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவானது தற்போது டோனி ரசிகர்கள் இடையே மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்