Image Courtesy : Twitter 
கிரிக்கெட்

டேல் ஸ்டெயினை தொடர்ந்து தோனியிடம் "ஆட்டோகிராப்" வாங்கிய மும்பை பயிற்சியாளர்..!!

ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் டேல் ஸ்டெய்ன் சமீபத்தில் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.

மும்பை,

ஐபிஎல் 15வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.

கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணியின் போட்டி முடிந்த பிறகு எதிரணியின் வீரர்கள் தோனியிடம் "ஆட்டோகிராப்" வாங்கும் நிகழ்வு நடந்து கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் கூட ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியின் ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.

இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பிறகு தோனியிடம் மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் ஆட்டோகிராப் வாங்கினார். அவரை தொடர்ந்து மும்பை அணியின் சில இளம் வீரர்களும் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கினர்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.