கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் புனே அணி முதலில் பேட்டிங்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் புனே அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

தினத்தந்தி

மும்பை,

8 அணிகள் இடையிலான 10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. நேற்று முன்தினத்துடன் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன. நேற்று ஓய்வு நாளாகும்.

லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளியும், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளியும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 8 வெற்றி, 5 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவில்லை) 17 புள்ளியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளியும் பெற்று முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 வெற்றி, 7 தோல்வியுடன் 14 புள்ளியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளியும், குஜராத் லயன்ஸ் அணி 4 வெற்றி, 10 தோல்வியுடன் 8 புள்ளியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3 வெற்றி, 10 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவில்லை) 7 புள்ளியும் பெற்று முறையே 5 முதல் 8 இடங்களை தனதாக்கி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ்-ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி புனே அணி முதலில் பேட் செய்ய உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்