கிரிக்கெட்

ஐபிஎல் முடிந்த பிறகு வீரர்களுக்காக தனி விமானம் இயக்க வேண்டும்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் லின் வேண்டுகோள்

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தனி விமானத்தில் ஆஸ்திரேலிய திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிறிஸ் லின் அறிவுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான கிறிஸ் லின், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கிறிஸ் லின் கூறியிருப்பதாவது:- நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலிய வீரர்களை தனி விமானம் மூலம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா? என நான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டேன்.

எங்களை விட மிக கடுமையான சூழலில் மக்கள் இருப்பதை நான் அறிவேன். நாங்கள் மிகக் கடுமையான உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தே வருகிறோம். அடுத்த வாரம் தடுப்பூசி போட்டுக்கொள்ள இருக்கிறோம். எனவே, நாங்கள் தனி விமானத்தில் நாடு திரும்புவதற்கு அரசு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம்.

அபாயங்களை அறிந்தே வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எனினும், ஐபிஎல் முடிந்த பிறகு பத்திரமாக தாயகம் திரும்பினால் சிறப்பாக இருக்கும் என்றார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு