மும்பை,
ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 65-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற ஐதராபாத் அணிக்கு இன்றைய போட்டி முக்கியமானதாகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.