கிரிக்கெட்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் புதிய வரலாற்று சாதனை படைத்தை மும்பை இந்தியன்ஸ்

மொகாலி மைதானத்தில் புதிய சாதனையை மும்பை அணி படைத்துள்ளது.

தினத்தந்தி

மொகாலி,

ஐபிஎல் தொடரின் 46-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மொகாலி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி முதலில் தடுமாறினாலும் அதன் பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் ஓவரை நாலாபுறமும் விளாசினர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டில் வெளியேறினார். அதனையடுத்து நிதானமாக ஆடிய மும்பை அணி போக போக அதிரடியாக விளையாடி முதல் போட்டிக்கு பழிவாங்கும் விதமாக இந்த போட்டியை 18.5 ஓவரில் சேசிங் செய்தனர்.

இதனால் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 214 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் மொகாலியில் அதிக ரன்களை சேசிங் செய்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையை மும்பை அணி படைத்துள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்