கிரிக்கெட்

ஐபிஎல்: மும்பை - பெங்களூரு இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

மும்பை,

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. மும்பை மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது.

3 ஆட்டங்களில் ஆடியுள்ள பெங்களூரு 2 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டங்களில் ஆடியுள்ள மும்பை 1 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.