Image Courtesy: X (Twitter)  
கிரிக்கெட்

மும்பை - கொல்கத்தா ஆட்டம்; பந்தை எடுத்து செல்ல முயன்ற ரசிகர்...வலுக்கட்டாயமாக மீட்ட போலீசார் - வீடியோ

ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

தினத்தந்தி

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளன.

இதற்கிடையே, ஐபிஎல் தொடரின் 60-வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த போட்டி 16 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த போட்டியின் போது மைதானத்தில் விழுந்த பந்தை ரசிகர் ஒருவர் மறைத்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். அதை கவனித்த போலீசார் அவரை நிறுத்தி அவரிடம் இருந்து பந்தை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்துள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து