கிரிக்கெட்

வீரர்களுக்கு மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா எச்சரிக்கை

மும்பை அணி தொடக்க ஆட்டத் துக்கு பிறகு தொடர்ச்சியாக சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும்.

மும்பை ,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிஇடம் தோல்வியடைந்தது. மும்பை அணி தொடக்க ஆட்டத் துக்கு பிறகு தொடர்ச்சியாக சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். பின்னர் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

இனி நாங்கள் சில கடினமான முடிவுகளை (முன்னணி வீரர்கள் நீக்கம்) எடுக்க வேண்டுமா அல்லது இந்த நிலைமை மாறும் என்ற நம்பிக்கை யோடு தொடர்ந்து அதே அணியோடு விளையாட வேண்டுமா என்பதை யும் பார்க்க வேண்டும். இது போன்ற சில கடினமான கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இதற்கான பொறுப்பையும் நாம் ஏற்க வேண்டும்.இவ்வாறு பாண்ட்யா கூறினார்.