Image courtesy : AFP 
கிரிக்கெட்

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ்

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.

தினத்தந்தி

சென்னை:

ஐபிஎல் தொடரில் ஆடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் இருந்து வருகிறார். ஹைதராபாத் அணி தற்போது சென்னையில் தங்கி கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், முத்தையா முரளிதரனுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவசரமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டதாகவும், அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் தனது வழக்கமான வேலையை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு