கோப்புப்படம் 
கிரிக்கெட்

ஜிம்பாப்வே அணிக்கெதிரான கிரிக்கெட் தொடர்: வங்காள தேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் விலகல்

ஜிம்பாப்வே அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து வங்காள தேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் விலகி உள்ளார்.

தினத்தந்தி

ஹராரே,

வங்காளதேச கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே ஹராரேயில் நடந்த டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது.

முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில் வங்காளதேச அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான முஷ்பிகுர் ரஹிம் திடீரென ஜிம்பாப்வே பயணத்தில் இருந்து விலகி நேற்று டாக்கா திரும்பினார். அவர் குடும்ப பிரச்சினை காரணமாக இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் 20 ஓவர் அணியில் இடம் பெறவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது