கிரிக்கெட்

முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: மும்பை அணியில் தெண்டுல்கர் மகனுக்கு இடம்

சயத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது.

தினத்தந்தி

மும்பை,

போட்டியில் பங்கேற்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அணி வீரர்களின் எண்ணிக்கையை 20-ல் இருந்து 22 ஆக உயர்த்திக்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மும்பை அணியில் கூடுதலாக அர்ஜூன் தெண்டுல்கர், ஹனகவாடி ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். 19 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் ஆவார். அவர் மும்பை சீனியர் அணியில் இடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது