கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினை விட நாதன் லயன் சிறந்தவர் - பிராட் ஹாக் கருத்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினை விட நாதன் லயன் சிறந்தவர் என்று பிராட் ஹாக் கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொறுத்தமட்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோரில் சிறந்த ஆப்-ஸ்பின்னர் யார்? என்று சமூக வலைத்தளம் மூலம் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் அளித்த பதிலில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஆப்-ஸ்பின்னர் என்ற பொறுப்பை அஸ்வினிடம் இருந்து கடந்த ஆண்டில் நாதன் லயன் எடுத்துக்கொண்டார் என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் இருவரும் மெத்தனம் காட்டாமல் தங்கள் ஆட்டத்தில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து