கிரிக்கெட்

பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்: ஐதராபாத் வீரர்

ஐதராபாத் அணி 2-ல் தோல்வி கண்டுள்ளது.

ஐதராபாத்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

இந்த நிலையில் அந்த அணியின் ஹென்ரிச் கிளாசன் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது,

எங்களது பேட்டிங் இதுவரை நன்றாகவே இருக்கிறது. ஆனால் 3 ஆட்டங் களையும் சேர்த்து ஏறக்குறைய 40 ரன்களை தவற விட்டுள்ளோம். பேட் டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். நாங்கள் தடுமாறிய இரு ஆட்டங்களிலும் பேட்டிங்கில் திட்டமிடலை சரியாக செயல்படுத்த வில்லை. பந்து வீச்சில், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசியுள்ளனர். நாங்கள் முதலில் பேட் செய்யும் போது 220-230 ரன் கள் குவிக்க வேண்டியது அவசியமாகும். அது தான் பந்து வீச்சாளர்க ளுக்கு வெற்றியை தேடித்தருவதற்கான வாய்ப்பை அளிக்கும்.என தெரிவித்தார்.