கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முதல்முறையாக தகுதிபெற்ற நெதர்லாந்து

தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்தில் வரும் ஜூன் 12ம் தேதி தொடங்கி ஜூலை 5 வரை மகளிர் கிரிக்கெட் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் நெதர்லாந்து, அமெரிக்கா அணியை எதிர்கொண்டது.முதலில் விளையாடிய அமெரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய நெதர்லாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 12 ஓவர்களில் 90 ரன்களில் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.இதனால் டிஎல்எஸ் விதிப்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றது. மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முதல்முறையாக நெதர்லாந்து தகுதிபெற்றது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்