image courtesy: PTI 
கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்கள் நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணியை வலுப்படுத்தும் விதமாக புதிய தலைமை பயிற்சியாளர்களை நியமித்துள்ளது. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பயிற்சியின் கீழ்தான் இந்திய கிரிக்கெட் அணி 2011-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. இவரது பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் ஆரம்பமாக உள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் வீரரான அசார் மக்மூத் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு