Image Courtesy: @TNCACricket  
கிரிக்கெட்

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கூட்டரங்கம் திறப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேப்பாக்கம் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூட்டரங்கம் வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள கே.எம்.கே ஸ்டாண்டில் புதிதாக ஸ்ரீராமன் அரங்கம் நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பி. அசோக் சிகாமணி புதிய அரங்கை திறந்து வைத்தார். முன்னாள் தலைவர் ரூபா குருநாத், சென்னை சூப்பர் கிங்ஸ் சி.இ.ஓ கே.எஸ். விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர்.

மேலும் சிறப்பிடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த தேசிய தேர்வுக் குழு உறுப்பினர் எஸ். சரத், ஐ.சி.சி முன்னாள் நடுவர் எஸ்.ரவி, வளரும் ஐ.சி.சி நடுவர் மதனகோபால், ஐ.சி.சி பேனல் நடுவர் என்.ஜனனி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். சங்கச் செயலர் ஆர்.ஐ.பழனி, துணைச் செயலர் ஆர்.என். பாபா ஆகியோர் பங்கேற்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்